இன்று காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மேலும் 1422 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இதுதவிர, போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, பெருமளவான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் தங்க ஆபரணங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை கொள்ளையிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 23 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது