செனெகலின் கரையோர பகுதியில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது.
செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்த செய்தி
வெளியாகியுள்ளது. உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது குடியேற்றவாசிகள் பல நாட்களாக அட்லண்டிக் சமுத்திரத்தில் மிதந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். படகு எப்போது எங்கிருந்து புறப்பட்டது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன.