சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 49ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. போட்டி முடிவை அடுத்து அணிகள் நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ந்தும் 4ஆம் இடத்தில் இருக்கிறது. 8ஆவது இடத்திலிருந்த பஞ்சாப் கிங்ஸ் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தை அடைந்துள்ளது.
இப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸின் ஆற்றல்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த மட்டத்தில் இருந்தது. 163 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ப்ரப்சிம்ரன் சிங் 13 ஒடட்ங்களுடன் வெளியேறினார். எனினும், ஜொனி பெயாஸ்டோவ், ரைலி ரூசோவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 49ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.