செம்மணியில் நேற்று 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!!

0
19

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில்  நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக ஐந்து மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஆறு மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் 135 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. 

மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட  மனித என்புத் தொகுதிகளில் இருந்து 126 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.