Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூர் சந்தையில் இயற்கையான முட்டைகளைத் தவிர செயற்கை முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.உள்ளூர் முட்டை உற்பத்தியை மக்கள் நம்பலாம், ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
உள்ளூர் முட்டை உற்பத்தியில் இதுவரை இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை, ஆனால் செயற்கை முட்டைகள் குறித்து சமூக கவலை உள்ளது.அத்தியாவசிய உணவுகளின் தரம் குறித்தும், நுகர்வோர் குறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஒரு சங்கமாக நாங்கள் எப்போதும் கோருகிறோம்.
நுகர்வோர் உள்ளூர் உணவுப் பொருட்களைப் பயன்படுத்த மறுத்தால், அது உள்ளூர் பொருட்களின் மற்றொரு சரிவுக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.