கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் ஒருமாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று கடந்த மார்ச் 23ஆம் திகதி வத்திக்கான் திரும்பினார்.
இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று (6) நடந்த பிரார்த்தனையில் பாப்பரசர் கலந்து கொண்டார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் “அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துகள்” எனவும் தெரிவித்தார்.