செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

0
68

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் நேற்று குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு கடந்த காலங்களில் சட்டபூர்வ சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.