செவ்வாயிலிருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது சீனா அனுப்பிய சுரொங் ரோவர்
அந்த ரோவரின் முன் பகுதியில் எடுக்கப்பட்ட படம் நில அமைப்பை காட்டுகிறது. பின் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சுரொங்கின் சூரிய சக்தி தகடுகளை காட்டுகிறது.
இந்த சுரொங் ரோவர் சீன நேரப்படி ஞாயிற்றுக்கிழமை செவ்வாயில் தரையிறங்கியது. செவ்வாயில் விண்கலனை வெற்றிகரமாகத் தரையிறக்கும் இரண்டாவது நாடாகியுள்ளது சீனா. இதுவரை அமெரிக்கா மட்டுமே அந்த சிறப்பைப் பெற்றிருந்தது.
தரையிறங்கியது மட்டுமல்லாமல் அதை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இயக்கும் சிறப்பையும் சீனா பெற்றுள்ளது.
செவ்வாயின் வட துருவத்தில் இருக்கும் பெரிய நிலப்பரப்பான உடோபியா பிளானிடியாவில் இந்த ரோவர் தரையிறங்கியுள்ளது. ஆறு சக்கரங்கள் கொண்ட அந்த ரோவர் அங்கு 90 நாட்கள் வரை பணியாற்றும் என சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் தேசிய விண்வெளி மையம் தனது வலைதளத்தில் இந்த புரோவரை பூமியிலிருந்து சுமந்துவந்த டியான்வென்-1 என்ற விண்கலனை விடுத்து கேப்ஸ்யூலுடன் செவ்வாயில் இந்த ரோவர் நுழைந்த தருணம் சிறு வீடியோவாக பதிவாகியுள்ளது.