செஹானி நவோதயாவுக்கு, அமைச்சர் ஜீவன் மடிக்கணினி வழங்கி வைப்பு!

0
58

உயர் தர பரீட்சையில், பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற, நுவரெலியா அம்பகமுவ கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை மத்திய கல்லூரி மாணவி எஸ்.செஹானி நவோதயாவுக்கு, மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் உள்ள காரியாலயத்திற்கு மாணவியை வரவழைத்து, உதவி வழங்கி, வாழ்த்து தெரிவித்துடன், எதிர்காலத்தில், கல்வியிலும், தொழில்நுட்ப பிரிவிலும் சிறந்து விளங்க, தனது ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

அமைச்சர், ஜனாதிபதிக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பை ஏற்படுத்திய வேளை, மாணவிக்கு, ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி தலைவர் கனபதி கனகராஜ், பாடசாலை அதிபர் உப்புல், மாணவியின் பெற்றோர் கலந்துகொண்டனர்.