விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜகத் மனுவர்ண, ஜெஹான் அப்புஹாமி, தம்மிக்க முனசிங்க மற்றும் எரங்க குணசேகர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் சட்டவிரோதமாக ஒன்று கூடி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன மற்றும் ரத்திந்து சேனாரத்ன ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.