மின்வெட்டை நீடிக்க வேண்டிய அவசியம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனக ரத்நாயக்க, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்டதால் மின்வெட்டை நீட்டிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலக்கரி கொள்முதல் சாத்தியம் என்பதை அறிய முடிகிறது
மேலும் இலங்கையில் தற்போது தினசரி இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபடுகிறது.
இதேவேளை நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள 3 வது அலகு பழுதுபார்க்கப்பட்ட பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பராமரிப்புக்காக அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள மற்றைய மின் உற்பத்தி அலகு அடுத்த வாரத்திற்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.