ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அளித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அவமதிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தமைக்காக நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி மற்றும் இருவரிடமிருந்து ரூ. 10 பில்லியன் இழப்பீட்டு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோரியிருந்தார். எனினும், ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி தனது நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்து வழக்கை தீர்த்து வைத்தார்.
கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் சந்திம ஜீவந்தரா முன் வழக்கு, செவ்வாய்க்கிழமை தீர்த்து வைக்கப்பட்டது.