8 ஆவது ஜனாதிபதியாக ரணில் நாளை காலை பதவிப்பிரமாணம்!

0
196

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாளை காலை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க, தனது பதவிப்பிரமாணத்தை பாராளுமன்ற சபைக்கு வெளியில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.