ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத், நேற்று பிற்பகல் கொழும்பு ஹூணுபிட்டிய கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். விஹாரைக்கு வருகை தந்த காமினி செனரத், விஹாராதிகாரி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரரைச் சந்தித்து
ஆசி பெற்றார்.அதனைத் தொடர்ந்து மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதியின் புதிய செயலாளருக்கு, மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.