ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்தினை தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான சக்தி கிடைக்க வேண்டும். நாடாளுமன்றிலும் வெளியிலும் எடுக்கப்படும் ஜனநாயக தீர்மானங்களுக்கு முகங் கொடுக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தயாராகவுள்ளது எனவும் அவர் தனது வாழ்த்தில் தெரிவித்திருந்தார்.
நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டிய தருணம் தற்போது தொடங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.