ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்

0
66

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்கிறார்.

மே 20ஆம் திகதி நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில்’கூட்டுச் செழுமைக்கான நீர்’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளதோடு இந்தோனேசிய ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன