24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி செயலணியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசர அழைப்பு மத்திய நிலையம்

பயணக்கட்டுப்பாடுகள் அமுலாகியுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும்; அவசர அழைப்பு மத்திய நிலையம் ஸ்;தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 0652222236,மற்றும் 0653121777 ஆகிய தொலைபேசி இல்ககங்களுக்கும் 0771528938 மற்றும் 0783212108 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்பு கொள்ளுமாறும் ஜனாதிபதி செயலணியின் மாவட்ட அவசர அழைப்பு மத்திய நிலைய இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

குறித்த மத்திய நிலையம், அலரி மாளிகையில் உள்ள ஜனாதிபதி செயலணியின் பிரதான செயற்பாட்டு மையத்துடன் இணைக்கப்படுள்ளதுடன் பிரதமரது செயலாளரின் கண்காணிப்பில் வழிநடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தாம் வசிக்கும் மாவட்டத்தின் அவசர அழைப்பு மத்திய நிலையத்தை தொடர்புகொண்டு, பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles