நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவினால் இந்த நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பொருளியல் பட்டதாரியான அவர், பல உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.