ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 பேர் வேட்பு மனுத்தாக்கல்

0
61

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களுக்கு அமைய வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் செயற்பட வேண்டுமென தெரிவித்த அவர் தேர்தல் பிரசார கூட்டங்களின் போது தேசிய மற்றும் பௌத்த கொடி பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.