ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும்

0
75

ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகும் வேட்பாளரின் செலவு வரம்பு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரவித்துள்ளார்.