ஜனாதிபதி தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார்

0
74
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கடந்த பாதீட்டு திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 08 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப் பெட்டிகள் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.