ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் குருநாகல் ஆயருமான அதிபரான கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா மற்றும் கொழும்பு உதவி ஆயர் அதி வணக்கத்துக்குரிய டான் அந்தோனி ஜெயக்கொடி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் போது, கல்வி சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு விசாரணையின் முன்னேற்றம் மற்றும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேசினர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றிய ஒரு புதுப்பிப்பை வழங்கியதுடன், வாழ்க்கைச் செலவு தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் வரவிருக்கும் நடவடிக்கைகளை தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடினார்.