தேர்தல் ஆணைக்குழு திங்கட்கிழமை (21) கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னாரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட அறிக்கை காரணமாக பெறப்பட்ட முறைப்பாடுகளை விசாரணைகளை மேற்கொள்வதற்காக கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் நேற்று (17) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை, தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய ஆணைக்குழு 21 ஆம் திகதி கூட உள்ளது.