காஸாவில் எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹீ தலைமையிலான அரசாங்கம் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட வேண்டும் என இஸ்ரேலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு காசாவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து ஆறு பணயக் கைதிகளின் உடல்கள் அண்மையில் மீட்கப்பட்டதையடுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.