Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
2024ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. கடந்து போன ஆறு மாதங்களை விட இன்றிலிருந்து ஆரம்பமாகும் அடுத்த ஆறு மாதங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதே இதற்குக் காரணம்.
அடுத்த வாரம் ஜூலை 12ஆம் திகதி பிரம்மாண்டப் படமான இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த வாரம் ஜூலை 5ஆம் திகதியும், ஜூலை 19ஆம் திகதியும் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. அப்படி வெளியிட்டால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலைப் பெற முடியாது.இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 5ஆம் திகதி 5 சிறிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது.
“7ஜி, எமகாதகன், கவுண்டம்பாளையம், தேரடி, நானும் ஒரு அழகி” ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய படங்கள் என்பதால் இவற்றில் கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றங்கள் வரலாம்.