அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க்இ சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் ‘எக்ஸ்’ என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.
முகநூல் நிறுவனத்தினரின் ‘திரெட்ஸ்’ எனும் புதிய சமூக வலைதளமும் ஓ-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் எக்ஸின் வருவாய் குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. கடன் சுமையினாலும்இ 50மூ விளம்பர வருவாய் குறைந்திருப்பதனாலும்இ அதன் வருவாய் மிகவும் பின்னடைந்திருப்பதாக மஸ்க் இம்மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
விலைக்கு வாங்கியதிலிருந்தே தனது நிறுவனத்தை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மஸ்க்இ பல பணியாளர்களை நீக்கினார். விளம்பர துறையில் வல்லுனரான லிண்டா எக்கேரினோ என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார். சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை ‘ஓ’ என மாற்றினார். மேலும்இ ‘இது தற்காலிகமான லோகோதான். இதுவும் விரைவில் மாற்றப்படலாம்’ எனவும் அறிவித்தார். இந்நிலையில்இ ஓ-ன் மாதாந்திர பயனர் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 5.4 கோடி (540 மில்லியன்) என உறுதிப்படுத்தும் விதமாக சில புள்ளி விவரங்களையும்இ விளக்கப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். வருவாயை பெருக்க மஸ்க் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது. மே 2022-ல் டுவிட்டருக்கு சுமார் 2.3 கோடி (229 மில்லியன்) பயனாளிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.