ஜெயகமு ஸ்ரீ லங்கா நிகழ்வு மட்டக்களப்பு இந்து வித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பம்

0
99

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் ‘ஜெயகமு ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி’ மட்டக்களப்பு இந்து வித்தியாலய மைதானத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு வெளிநாட்டு தொழில் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு, வியாபாரம் மற்றும் தொழில்சார் பயிற்சிக்கான சந்தர்ப்பம் இதன்போது வழங்கப்படுகின்றது.
அத்துடன் பல்வேறு சேவைகளுடன் தொழில்சார் பயிற்சிக்கான, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சன்றிதழ் மேலும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத தொழில்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட கறுசறு திட்டம் ஸ்மார்ட் யுத் கிளப் உடன் இணைந்து இஸ்ரேலுக்கான தொழில் தொடர்பாக பதிவு செய்து கொள்ளும் சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்காக விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது.