ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் ‘ஜீனி’ திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அர்ஜுனன் இயக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இவர் தயாரிக்கும் 25ஆவது படமாகும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அதிக பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.
‘ஜீனி’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் 2 கோடி இந்திய ரூபா மதிப்பிலான பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ‘ஜீனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.