29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு முதுகலைதத்துவமாணிப் பட்டம் வழங்கி கௌரவிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளரும் இலக்கிய விமர்சகரும் கல்வியியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு தமிழ்த்துறைக்கான முதுகலைதத்துவமாணிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற முதலாம் நாள் அமர்வின் ஆரம்ப நிகழ்வின்போதே மேற்படி பட்டம் வழங்கப்பட்டது.

களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவரும்‌ அப்பாடசாலையின் ஆசிரியருமான ஜெஸ்மி மூஸா தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட துறை கலைமாணி மற்றும் விஷேட முதுகலைமாணி ஆகிய பட்டங்களை தமிழ்த்துறையில் பெற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகம் சாராத நிலையில் தமிழ்த்துறைக்கான மூன்று துறைசார் பட்டங்களைப் பெற்ற ஊடகத்துறை சார்ந்த ஈழத்தின் முதல் ஆய்வாளராக இவர் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச தமிழ் ஆய்வு மாநாடுகளில் பத்துக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள இவர் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வெளியாகும் பல்கலைக்கழக முதல்தர ஆய்விதழ்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுடன் இணைந்து ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை, இந்திய மற்றும் மலேசிய நாடுகளில் இலக்கியத்திற்கான இளம் ஆய்வாளர் விருதுகளைப் பெற்ற ஜெஸ்மி மூஸா கடந்த 2018 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் கலை, இலக்கிய, ஆய்வுத்துறைக்கான இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தேடலின் ஒரு பக்கம், முகநூல் முகவரிகள், நாகம்மாள் ஒரு பார்வை, திருக்குறள் பாடத்திட்டத் தெளிவுரை, தமிழ் மொழி இலக்கியப் பேழை, தனியாள் கல்வித்துறை கௌரவிப்புக்கள் அடங்கலாக எட்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

தேசியப் பத்திரிகைகளில் நூற்றுக்கு மேற்பட்ட இலக்கிய மற்றும் பொதுத்துறை சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவர் ஈழத்தின் தனித்துவமான இலக்கிய விமர்சன உரையாளர்களில் ஒருவராவார்.

பன்னூலாசிரியர் எஸ்.எம்.எம்.மூஸா- றாகிலா தம்பதிகளின் புதல்வரான இவர் கல்முனை கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட வளவாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஐந்து அமர்வுகளைக் கொண்ட பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 1852 பேரில் கலைத்துறையில் முதுகலைத்‌ தத்துவமாணிப் பட்டம் பெற்ற ஒரே ஒரு‌ ஆய்வு மாணவராகவும் இடம்பெற்றுள்ளார்.

தமிழ் கற்பித்தல் துறையில் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி வரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் கலாநிதி ஆய்வு மாணவனாகவும்‌ உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles