ஜேர்மனிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிக பூட்டு!

0
5

தொழிற்சங்க நடவடிக்கைகளால்    ஜேர்மனிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜேர்மனின் பிராங்பேர்ட் மற்றும் மியூனிக் மையங்கள் உட்பட 13 விமான நிலையங்களில் தொழிற்சங்கங்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக ஜேர்மனிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஜேர்மன் முழுவதும் இன்று அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விமானப் பயண இடையூறுகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை பயணிகள் விமான நிலையங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு , மறு முன்பதிவு அல்லது மாற்றுப் பயண விருப்பங்கள் பற்றிய தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனம் அல்லது சுற்றுலா நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .