நுவரெலியா மாவட்டத்தில், டன்சினனியில் இருந்து பூண்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான வீதி, புனரமைப்புச் செய்யப்பட்டு, இன்று, மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரால், வீதி கையளிக்கப்பட்டது.
பல வருட காலமாக, குன்றும் குழியுமாக காணப்பட்டு வந்த 9 கிலோ மீற்றர் நீளமான வீதி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் 13 பில்லியன் ரூபா நேரடி நிதி ஒதுக்கீட்டீன் மூலம், வீதி அபிவிருத்தி அதிகார சபையால், கார்ப்பட் இட்டு புனரமைக்கப்பட்டது.
இந்த வீதியை, 30 ற்கும் மேற்பட்ட தோட்டங்களை சார்ந்த பாடசாலை மாணவர்கள், மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில், வீதி புனரமைப்பு செய்யப்பட்டு, இன்று திறந்து வைக்கப்பட்டது.