28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டான் குழுமம் நடத்தும் புதிய விடியல் உதைபந்தாட்ட இறுதியாட்டம் இன்று

யாழ்ப்பாணம், டான் தொலைக்காட்சி குழுமம் நடத்தும் புதிய விடியல் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, துரையப்பா பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இறுதியாட்டத்தில் நாவாந்துறை சென். மேரீஸ், நாவாந்துறை சென். நீக்கிலஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இறுதியாட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு சம்பியன் கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 4 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. ஆட்ட நாயகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், சிறந்த பந்து காப்பாளருக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தின் விளையாட்டுத்துறையில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கப்படுவது
இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles