டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில மணித்தியாலங்களில் மீறினார் புட்டின் – உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பின் மீது தாக்குதல்

0
6

உக்ரைனின் வலுசக்திகட்டமைப்பினை தாக்கப்போவதில்லை  என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு வாக்குறுதியளித்த ஒரு சில மணித்தியாலங்களில்  ரஸ்ய ஜனாதிபதி உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்பின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்.

டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் எரிசக்தி உட்கட்டமைப்பின் மீது ரஸ்ய படையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போது ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனுடன் உடனடி யுத்த நிறுத்தத்தை நிராகரித்ததுடன் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புகள் மீது 30 நாட்களிற்கு தாக்குதலை மேற்கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

உக்ரைன் சமீபத்தில் சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்ட ஒருமாதகால யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள புட்டின் வெளிநாடுகள் இராணுவ புலனாய்வு உதவிகளை உக்ரைனிற்கு வழங்குவதை நிறுத்தினால் மாத்திரம் முழுமையான யுத்த நிறுத்தம் வெற்றிபெறும் என தெரிவித்திருந்தார்.

இரு தலைவர்களிற்கும் இடையிலான வெளிப்படையான 90 நிமிட  தொலைபேசி உரையாடல் முடிவடைந்த பின்னர் உக்ரைனின்  எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு புட்டின் உத்தரவிட்டார் என கிரெம்ளின் தெரிவித்திருந்தது.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின. இதற்கிடையே, இந்தப் போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதிahf  பதவியேற்ற  ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தன.