டிரம்புக்கு ஆதரவாக தீவிர வலதுசாரிகள் பேரணி

0
211

டிரம்பின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் வீதிகளில் இறங்கி டிரம்புக்கு குரல் கொடுத்தனர். தேர்தலில் முறைகேடு நடைபெற்றது என முன்னதாக டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். மேலும் ஜோ பைடன் தந்திரமாக வெற்றி பெற்றதாக அவர் கூறியிருந்தார்.

தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் டிரம்புக்கு ஆதரவாக குரல் கொடுத்து தெருவில் போராடினர். இவர்களுடன் பல வலதுசாரி அமைப்புகளும் சேர்ந்து கொண்டுள்ளன. ‘ஓத் கீ பாஸ் மிலிடா’, ‘பிரவுட் பாய்ஸ்’ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளனர். மில்லியன் மெகா மார்ச், மார்ச் ஃபார் டிரம்ப், ஸ்டாப் தி ஸ்டில் உள்ளிட்ட பல தலைப்புகளில் போராட்டம் பேரணிகள் நடைபெற உள்ளன.