டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் கடத்தல்: ஒருவர் கைது!

0
50

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 59 ஆயிரத்து 980 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 25 வயதான சந்தேக நபர் கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.