டுவிட்டர் நிறுவனத்துக்குப் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியை தான் நியமித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவரும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவரின் பெயரை இலோன் மஸ்க் வெளியிடவில்லை. ஆனால், அவர் ஒரு பெண் என்பதை இலோன் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார். புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி 6 வாரங்களுக்குள் தனது பணியை ஆரம்பிப்பார் எனவும் இலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
நிறைவேற்றுத் தலைவராகவும் பிரதம தொழில்நுட்ப அதிகாரியாகவும் தான் பதவி வகிக்கவுள்ளதாக இலோன் மஸ்க் அறிவித்ள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு இலோன் மஸ்க் வாங்கினார்.
அவர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டும் என டுவிட்டரில் அவர் நடத்திய வாக்கெடுப்;பில் அதிக எண்ணிக்கையானோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.