டெங்கு அதிதீவிரமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம்

0
103

நாட்டில் டெங்கு தொற்று அதிதீவிர நோய் நிலை மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்குகட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களின்அடிப் படையில், கடந்த8ஆம்திகதிவரை எட்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் 448 பேர் டெங்கு தொற்றுடன்

அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் இந்த வருடம் மாவட்ட அடிப்படையில் அதிக டெங்கு தொற்றாளர்கள்பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமே டெங்கு அதிதீவிரமடைந்த
மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.இதேவேளை, கடந்த வருடம்
அதிதீவிர தொற்று நிலையைக் கொண்டிருந்த கொழும்பில் இவ்வருடம் 284
டெங்குத்தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைபொறுத்தவரையில்யாழ்.போதனாமருத்துவமனையில்258பேரும்,பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் 93 பேரும். ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 35பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 33 பேரும், தெல்லிப்பழைஆதார மருத்துவமனையில் 29 பேருமாக448 டெங்கு நோயாளர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.