டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.
தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள், பொலிஸார் விமானத்தை தனி இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பயணிகள் அவசர வழியில் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.