டெல்லி பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல்

0
104

புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய புறநகர் மண்டலத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பிஹார் ராஜ்பவனுக்கு நேற்றுமின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்தமின்னஞ்சல் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக டெல்லி போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

இ-மெயில் மூலம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுப்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விமான நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலம் ஆகிய இடங்களில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளிகளில் போலீஸார் நடத்திய சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் புரளி என போலீஸார் தெரிவித்தனர்.