டைல்ஸ், சீமெந்து, குளியலறை சாதனங்களுக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்படும்

0
85

டைல்ஸ், சீமெந்து, குளியலறை சாதனங்களுக்கான அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சீமெந்திற்கான விலை நிர்ணயத்தின் போது, அதில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கான மதிப்பீடுகள் குறித்து தௌிவுபடுத்த வேண்டும் என சீமெந்து நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீமெந்து உற்பத்திக்கான செலவு, அதனூடாக கிடைத்த இலாபம், விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் இலாபம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சீமெந்திற்கான அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயிக்க வேண்டும். டைல்ஸ் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாலேயேஇ அதற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.