அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தின் சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மில்லியன் கணக்கான டொலரை கடன்களாக பெறுவது உள்ளிட்ட ஏனைய நன்மைகளை பெறுவதற்காக தனது நிகர மதிப்பை சட்டவிரோதமாக உயர்த்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.