கனடா – டொரொன்டோவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இழப்பீடாக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது.இதன்போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன