டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்:

0
137

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கானநாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 325 ரூபாய் 37 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399 ரூபாய் 75 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 415 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 356 ரூபாய் 34 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 26 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபாய் 37 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 216 ரூபாய் 41 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 88 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 15 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.30 ரூபாயிலிருந்து 314.80 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 326.28 ரூபாயிலிருந்து 325.78 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 314.92 ரூபாயிலிருந்து 313.93 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 325 ரூபாயிலிருந்து 324 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே,  316 ரூபாயிலிருந்து 315 ரூபாய் மற்றும்  326 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.