ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம்

0
5

அமெரிக்காவில்இ வொஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாடுகடத்தல்,பணியாளர்கள் பணிநீக்கம், காசா மற்றும் யுக்ரைன் போர்கள் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை மாளிகைக்கு வெளியேயும் பதாகைகளை ஏந்தியவாறு பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் நாடு கடத்திய அல்லது நாடு கடத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பலர் கோசங்களை எழுப்பி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.