தங்காலையில் சடலம் மீட்பு!

0
53

ஹம்பாந்தோட்டை, தங்காலை – நலகம பொல்தவன சந்தியில் உள்ள தென்னந்தோப்பில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலை – நலகமவை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதான தேஷான் எரந்த என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாடு கட்டச்சென்ற இளைஞன் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தினர் தேடியபோது சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.