தங்க பிஸ்கட்டுக்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

0
51

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர் ஒருவர் தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மாத்தறையைச் சேர்ந்த 40 வயதான விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் சுமார் 15 ஆண்டுகள் பாதுகாப்பு உத்திNயுhகத்தராக கடமையாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.அவரிடமிருந்து 2 கிலோகிராம் 86 கிராம் நிறையுடைய 18 தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.அவற்றின் பெறுமதி 48 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்கத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.