தடம் புரண்ட ரயில் தண்டவாளங்களை விரைவாக சீரமைப்பதற்கு விசேட குழு!

0
102

தடம் புரண்ட ரயில் தண்டவாளங்களை விரைவாக சீரமைப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பண்டிகைக் காலங்களில் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் ரயில்வே ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில்கள் தடம் புரண்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.