தண்டனைச் சட்டக் கோவை திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி

0
106

அனைத்து துறைகளிலும் உடல் ரீதியான தண்டனை விதிப்பதைத் தடை செய்வதற்காக, தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ சிறுவர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு தண்டனையும், சட்டத்தின்படி குற்றமாக கருதும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.