தண்ணீர் தொட்டியில் இருந்து தந்தையும், மகனும் சடலங்களாக மீட்பு!

0
285
Drowned man with long dark hair in the water sways in the muddy water lying face down in shallow water. Unrecognizable body in black clothes is washed ashore after a shipwreck. 50 fps 4k slow motion

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன் பிற்பகல் 2.00 மணி ஆகியும் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்த போது தண்ணீர் தொட்டியில் இருந்து குறித்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ரப்பர் தொழிற்சாலையின் நிர்வாக தர அதிகாரி என்பதுடன், தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பாதுகாப்பு குறித்து விசாரிக்க அங்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
தொழிற்சாலைக்கு தண்ணீர் சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட தொட்டியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்கள் காலி அக்மீமன பகுதியைச் சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளனர்.