போராட்டக்காரர்கள் தந்திரமாக மகிந்த ராஜபக்ஷவை பதவி விலக்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘அத்துடன், ராஜபக்ஷக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம்
தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப்பற்றி மக்கள் பின்னர் விளங்கிக்கொள்வார்கள்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளம் மூலமான உரையாடல் ஒன்றிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
‘எங்களுக்கு போராட்டத்தைப் பற்றி எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரச்னை உள்ளது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கட்சி சார்பற்றவர்கள் இல்லை. கோட்டாபய பதவி விலகும்போது பிரதமராக இருந்த மகிந்த அடுத்தபடியாக ஜனாதிபதி ஆவார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். அதனால்தான் அவர்கள் தந்திரமாக முதலில் மகிந்த ராஜபக்ஷவை பதவி விலக்கினார்கள்’ என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.